மாவட்ட செய்திகள்

உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம் + "||" + tower

உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்

உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்
குடிமங்கலம் அருகே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
குடிமங்கலம்
குடிமங்கலம் அருகே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
உயர் மின் கோபுரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மைவாடி முதல் இடையர்பாளையம் வரை உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்காக விவசாயிகளிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 
உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியின் போது பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் தென்னை மரங்களுக்கு ரூ.2½ கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி விவசாயிகள் உயர் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த ஆர்.டி.ஓ கீதா, தாசில்தார் ராமலிங்கம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், விவசாய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நில உரிமை சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருப்பதால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என அதிகாரிகள் கூறினர்.
விவசாயிகள் தரப்பில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டு தொகையை நீதிமன்றத்தில் செலுத்தவேண்டும் என கூறியதை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.