மாவட்ட செய்திகள்

தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொது மக்கள் மனு + "||" + petision

தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொது மக்கள் மனு

தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொது மக்கள் மனு
தாராபுரம் அருகே தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி சப்-கலெக்டரிடம் பொது மக்கள் மனு கொடுத்தனர்.
தாராபுரம்
 தாராபுரம் அருகே தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து  முடிக்கக்கோரி சப்-கலெக்டரிடம் பொது மக்கள் மனு கொடுத்தனர். 
தாராபுரம் கவுண்டச்சி புதூர் ஊராட்சி பாலசுப்பிரமணி நகர் பொதுமக்கள், சப்-கலெக்டர் (பொறுப்பு) ரங்கராஜனிடம் ஒரு மனு கொடுத்தனர். 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குண்டும் குழியுமான சாலை
 தாராபுரம் கவுண்டச்சிபுதூர் தார்சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. 
தற்போது அந்த சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் இருந்து வருகிறது.
 இந்த தார்சாலையை புதுப்பிக்க பல்வேறு போராட்டங்கள் நடத்திய பிறகு ஒருவழியாக கடந்த பிப்ரவரி மாதம் சாலை புதுப்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. 
பிறகு அதன் பணிகள் தொடங்கப்பட்டு ஜல்லி கற்கள் போடப்பட்டது.  கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாகியும் எந்த வேலையும் நடக்கவில்லை. 
விரைந்து முடிக்க வேண்டும்
இதனால் ரோடு முழுவதும் ஜல்லி கற்கள் பரவிக்கிடக்கிறது. அதேபோன்று ஆழ்துளை கிணறு பழுதாகி 5 மாதம் ஆகிறது. அதை பழுதுபார்க்க கழட்டிப்போட்டு மூன்று மாதங்கள் ஆகின்றன. 
இது விஷயமாக ஊராட்சி தலைவரிடம் பலமுறை சொல்லியும் அதை கண்டுகொள்ளவில்லை. இந்த பகுதியில் வசிக்கும் 2000 மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. மேற்படி குறைகளை சரி செய்ய வேண்டும். 
இதற்கு ஒரு வார கால கட்டத்தில் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 20-ந் தேதி பொது மக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் நடைபெறும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.