நோய் எதிர்ப்பு திறன் குறித்து பொதுமக்களுக்கு பரிசோதனை
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் நோய் எதிர்ப்பு திறன் குறித்து பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர்
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் நோய் எதிர்ப்பு திறன் குறித்து பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா
கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வந்தது. அந்த அளவிற்கு பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. இதுபோல் கொரோனா தடுப்பூசியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பலரும் தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த பகுதிகளில், பெரும்பாலான பகுதிகள் மாநகராட்சி பகுதியாகும். இதனால் மாநகராட்சி பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, கொரோனா நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
பரிசோதனை
இதற்கிடையே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு திறன்எவ்வாறு இருக்கிறது இது போல் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களிடம் எவ்வாறு இருக்கிறது? என்பது குறித்து ஆய்வு செய்ய சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி மாநகர் பகுதிகளில் சுகாதாரத்துறையினர் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பூர் இளங்கோநகர் பகுதிகளில் நேற்று காலை 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் டாக்டர் பூர்ணிமா, ஆய்வக உதவியாளர் காயத்ரி மற்றும் சுகாதாரத்துறையினர் இந்த பணியை மேற்கொண்டனர்.
இந்த பரிசோதனை முடிவடைந்ததும், இதற்கான முடிவுகள் தெரிய வரும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story