மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 193 பேர் பாதிப்பு - 4 பேர் உயிரிழப்பு + "||" + Corona outbreak in Chengalpattu district kills 193 in one day - 4 deaths

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 193 பேர் பாதிப்பு - 4 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 193 பேர் பாதிப்பு - 4 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 193 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர்.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 193 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 280 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 145 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 365 ஆக உயர்ந்தது. 1,770 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 67 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 68 ஆயிரத்து 517 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 

நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,180 ஆக உயர்ந்துள்ளது. 713 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.