வாணியம்பாடி; 3 கோவில்களின் பூட்டுகளை உடைத்து திருட்டு


வாணியம்பாடி; 3 கோவில்களின் பூட்டுகளை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 3 July 2021 6:30 PM IST (Updated: 3 July 2021 6:30 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் அடுத்தடுத்து 3 கோவில்களில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்ெசன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடியில் அடுத்தடுத்து 3 கோவில்களில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்ற  மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

நகை, பணம் திருட்டு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் உள்ள அழகு மாரியம்மன் கோவிலில், ஏகாம்பரம் என்ற கோவில் பூசாரி பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி சென்றார்.  அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த பணத்தை 
திருடிச்சென்றுள்ளனர். 
இந்த காட்சி கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. 

அதேபோல் வாணியம்பாடி ராமையன் தோப்பு பகுதியில் உள்ள பாரத கோவில் மற்றும் முருகர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோ மற்றும் உண்டியலை உடைத்து நகை, பணத்தை 
திருடிச்சென்றுள்ளனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இச்சம்பவங்கள் குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில்களில் திருட்டு போன பொருட்கள் குறித்த விவரங்களை ஊழியர்களிடம் கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 கோவில்களில் திருட்டு நடந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story