ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
பேராயம்பட்டு ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணாபுரம்
பேராயம்பட்டு ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பேராயம்பட்டு கிராமம். இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 2 பிரிவாக குடும்ப அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தனி குறியீடு உள்ள குடும்ப அட்டையும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு தனிக் குறியீடு கொண்ட குடும்ப அட்டையும் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நிலம், வீடு உள்ளிட்ட எந்த இடமும் இல்லாதவர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை கிடைக்கவில்லை என்றும் நிலம், வீடு உள்ளவர்களுக்கு மட்டும் அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று கூறி பேராயம்பட்டில் உள்ள ரேஷன் கடை முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உங்களின் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள் என்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story