நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு; கலெக்டரிடம் விவசாயிகள் மனு


நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு; கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 3 July 2021 6:57 PM IST (Updated: 3 July 2021 6:57 PM IST)
t-max-icont-min-icon

தண்டராம்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா தென்முடியனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுலகத்துக்கு வந்து, கலெக்டர் முருகேசை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். 

அந்த மனுவில், தண்டராம்பட்டில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.

அதில் விவசாயிகள் நெல் மட்டும் கொள்முதல் செய்யும் முறை உள்ளது. ஆனால் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளிடம் நெல்லை கொள்முதல் செய்து கொண்டு பல்வேறு வகையில் முறைகேடு மற்றும் ஊழல் நடக்கிறது. 

இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் ெதரிவித்துள்ளனர். 

Next Story