நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 July 2021 7:00 PM IST (Updated: 3 July 2021 7:38 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கம்பம்:
கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். கம்பம் சட்டமன்ற தொகுதி தலைவர் தங்கபாண்டி, செயலாளர் குணசேகரன், நகர செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், மதுபான கடைகளை மூடவேண்டும், நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது. .இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story