விமானத்தில் துப்பாக்கியை அனுப்ப முயன்ற டாக்டர் மீது வழக்கு
விமானத்தில் துப்பாக்கியை அனுப்ப முயன்ற டாக்டர் மீது வழக்கு
கோவை
விமானத்தில் துப்பாக்கியை அனுப்ப முயன்ற டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பார்சலில் துப்பாக்கி
சேலத்தைச் சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஸ்டீபன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ஏர் பிஸ்டல் துப்பாக்கியை ஆன்லைன் மூலம் வாங்கினார்.
அது பழுதானதால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கூரியர் பார்சல் அனுப்ப டாக்டர் சாமுவேல் ஸ்டீபன் முடிவு செய்தார்.
அதன்படி அவர், துப்பாக்கியை பார்சல் செய்து கூரியர் நிறுவனத்தில் கொடுத்தார். அந்த பார்சலில் துப்பாக்கி இருப்பது தெரியாமல் கூரியர் நிறுவனத்தினர் கோவை விமானத்தில் இருந்து விமானம் மூலம் அனுப்ப கொண்டு சென்றனர்.
டாக்டர் மீது வழக்கு
அங்கு விமான நிலைய அதிகாரிகள் பார்சல்களை சோதனை செய்த னர். அப்போது ஒரு பார்சலில் துப்பாக்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனே அவர்கள், சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தினரை அழைத்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் பார்சலை கொடுத்த டாக்டர் சாமுவேல் ஸ்டீபனையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி முருகன் கொடுத்த புகாரின் பேரில், முறையான தகவல் தெரிவிக்காமல் துப்பாக்கியை கூரியர் பார்சல் மூலம் விமானத்தில் அனுப்பி வைக்க முயன்றதாக டாக்டர் சாமுவேல் ஸ்டீபன் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story