ஆற்காடு; கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்


ஆற்காடு; கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 3 July 2021 7:42 PM IST (Updated: 3 July 2021 7:42 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காட்டில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதிகளில் கொரோனா வைரஸ் 2-ம் அலை பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 

மேலும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நேற்று தாசில்தார் காமாட்சி தலைமையில் வருவாய்த்துறையினர் ஆற்காடு பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்று சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது முக கவசம் அணியாமல், சமூக இடைவெளி பின்பற்றாமல், கிருமிநாசினி பயன்படுத்தாமல் திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்த ஓட்டல்கள், துணிக்கடைகள், மளிகைக் கடைகள், பங்க் கடைகள் என மொத்தம் 12 கடைகளுக்கு ரூ.2,400 அபராதம் விதித்தனர்.

Next Story