வேலூர் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 49 பேருக்கு தொற்று உறுதியானது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் முடிவுகள் தினந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.
நேற்று வெளியான முடிவில் ஒரேநாளில் மாவட்டத்தில் 49 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 15 பேர் அடங்குவர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 43 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்று கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்.
மக்கள் அனைவரும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story