மூலிகை இலைகளால் முக கவசம்
பெரும்பாறை அருகே மூலிகை இலைகளால் ஆன முக கவசத்தை பழங்குடியின மக்கள் அணிகின்றனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான பண்ணைக்காடு அருகே மச்சூர் கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இயற்கையான முறையில் முககவசம் அணிந்து வருகின்றனர்.
அதாவது வனப்பகுதியில் மருத்துவ குணம் மிகுந்த பிசிலாம் என்னும் மரத்தின் மூலிகை இலைகளை அவர்கள் முக கவசமாக பயன்படுத்துகின்றனர். இந்த மரத்தின் இலை சிறந்த கிருமிநாசினி ஆகும்.
மருத்துவத்தன்மை, நறுமணம் ஆகியவற்றை கொண்ட இந்த இலைகளை நுகரும்போது நுரையீரல்களுக்கு சென்று கிருமிகளை அழிக்கிறது என்றும், குழந்தைகளின் ஜலதோஷ பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Related Tags :
Next Story