ஓடும் காரில் திடீர் தீ
வேடசந்தூர் அருகே ஓடும் காரில் தீப்பற்றி எரிந்தது.
வேடசந்தூர்:
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). எலக்ட்ரீசியனான இவர், நேற்று முன்தினம் பழனிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார்.
வேடசந்தூர்-வடமதுரை சாலையில் ஸ்ரீராமபுரம் அருகே இரவில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். சிறிதுநேரத்தில் கார் மள, மளவென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் தீயில் கருகி கார் எலும்புக்கூடானது.
இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீப்பிடித்தவுடன் சுதாரித்துக்கொண்ட மணிகண்டன் உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கியதால் அவர் உயிர் தப்பினார்.
Related Tags :
Next Story