சுகப்பிரசவத்தில் பிறந்த 4½ கிலோ எடையுள்ள குழந்தை


சுகப்பிரசவத்தில் பிறந்த  4½ கிலோ எடையுள்ள குழந்தை
x
தினத்தந்தி 3 July 2021 10:11 PM IST (Updated: 3 July 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

சுகப்பிரசவத்தில் பிறந்த 4½ கிலோ எடையுள்ள குழந்தை

உடுமலை,
உடுமலை அருகே உள்ள சிவசக்தி காலனியைச்சேர்ந்த ஜெகதீஷ்பாபு என்பவரின் மனைவி நிர்மலாதேவி. இவர் முதல் பிரசவமான தலைப்பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றார். அப்போது குழந்தையின் எடை அதிகமாக இருக்கும் என்பதால் அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறக்கும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்மலாதேவிக்கு, பிரசவ வார்டு தலைமை மருத்துவர் டாக்டர் ஜோதிமணி தலைமையிலான மருத்துவ குழுவினரின் சிகிச்சையால் சுகப்பிரசவம் ஆனது. அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பொதுவாக குழந்தை பிறக்கும் போது சுமார் 3½ கிலோ வரை எடை இருக்கும். ஆனால் இந்த குழந்தை 4½ கிலோ எடை இருந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். எடை அதிகமாக இருக்கும் என்ற நிலையிலும் அறுவை சிகிச்சை இல்லாமல் சுகபிரசவம் ஆனதால், மருத்துவக்குழுவினரை பலரும் பாராட்டினர். 

Next Story