காயத்துடன் உலா வந்த மான் குட்டி


காயத்துடன் உலா வந்த மான் குட்டி
x
தினத்தந்தி 3 July 2021 4:43 PM GMT (Updated: 3 July 2021 4:43 PM GMT)

கொடைக்கானலில் காயத்துடன் மான் குட்டி ஒன்று உலா வந்தது.

கொடைக்கானல்:

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ‘மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலாதலங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து குறைந்து விட்டது. இதன் எதிரொலியாக வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியே வந்து, கொடைக்கானல் நகர்ப்பகுதியில் உலா வருவது வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில் நேற்று காலை கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் மான் குட்டி ஒன்று, காலில் காயத்துடன் சாலையில் சுற்றியது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர்,

 அந்த மான்குட்டியை பிடித்தனர். பின்னர் காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருத்துவ சிகிச்சை அளித்து பேரிஜம் வனப்பகுதியில் விட்டனர். வனப்பகுதியில் இருந்து தாயை பிரிந்து வந்த மான் குட்டிக்கு காயம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

Next Story