சாராயம் கடத்திய 5 பேர் கைது


சாராயம் கடத்திய 5 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2021 10:17 PM IST (Updated: 3 July 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

சிக்கல்:
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
5 பேர் கைது
கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் கீழ்வேளூர்- கச்சனம் சாலை சந்திப்பு, குருக்கத்திமெயின்ரோடு, சிக்கல் ெரயில்வே கேட் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்த திருவாரூர் மாவட்டம் கீழமணலி கார்நாதகோவில் பகுதியை சேர்ந்த பூசாந்திரன் மகன் மணிகண்டன் (வயது 30), கோட்டூர் கமலாபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த குஞ்சிபிள்ளை மகன் சதீஷ் (36), கோட்டூர் தெற்கு தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் மணிகண்டன் ( 32), திருக்குவளை அருந்தவபுரம் கீழத்தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் வீரசேகரன் (32). கோட்டூர் நடுத்தெருவை சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ் (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
 மேலும் அவர்களிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story