53 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


53 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 3 July 2021 10:28 PM IST (Updated: 3 July 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் 53 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 53 சப்-இன்ஸ்பெக்டர்கள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காரைக்குடி தெற்கில் பணிபுரிந்த பரமசிவம் பூவந்தி சப்-இன்ஸ்பெக்டராகவும், காளையார் கோவிலில் பணிபுரிந்த ராதாகிருஷ்ணன் சிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டார். சிவகங்கையிலிருந்த சகாய புஷ்பராஜ் தேவகோட்டை தாலுகா சப்-இன்ஸ்பெக்டராகவும், வெள்ளைச்சாமி நில அபகரிப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.சிங்கம்புணரியில் பணிபுரிந்த முருகேசன் சிவகங்கை தாலுகாவிற்கு மாற்றப்பட்டார். இவர்கள் உள்பட மாவட்டத்தில் 53 சப்-இன்ஸ்பெக்டர்கள் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

Next Story