ஸ்ரீவைகுண்டம் வாரச்சந்தை பழைய கட்டிடம் அகற்றம்


ஸ்ரீவைகுண்டம் வாரச்சந்தை பழைய கட்டிடம் அகற்றம்
x
தினத்தந்தி 3 July 2021 10:30 PM IST (Updated: 3 July 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் வாரச்சந்தை பழைய கட்டிடம் அகற்றப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டத்தில் வாரச்சந்தை பல ஆண்டுகளாக செயல்படாததால், அங்குள்ள கட்டிடம் பராமரிப்பற்று பழுதடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அங்கு மீண்டும் வாரச்சந்தை நடத்தும் வகையில், ரூ.1¼ கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக பழைய கட்டிடத்தை அகற்றும் பணி தொடங்கியது. இந்த பணிகளை நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் மணிமொழியன் ரங்கசாமி, பொறியாளர் முத்துகுமாரசாமி, சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.



Next Story