மாவட்ட செய்திகள்

சாலையின் குறுக்கே போடப்பட்டமுட்செடிகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Laid across the road Public road blockade demanding removal of thorns

சாலையின் குறுக்கே போடப்பட்டமுட்செடிகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சாலையின் குறுக்கே போடப்பட்டமுட்செடிகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
தியாகதுருகம் அருகே சாலையின் குறுக்கே போடப்பட்ட முட்செடிகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கண்டாச்சிமங்கலம்

புதுக்காலனி சாலை 

தியாகதுருகம் அருகே கூத்தக்குடி புதுக்காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதே பகுதியைச் சேர்ந்த ராமதாஸ்(வயது 48), இவரது மனைவி தனலட்சுமி, மகன்கள் ராஜ்குமார், விஜயகுமார் ஆகியோர் புதுக்காலனிக்கு செல்லும் சாலையின் குறுக்கே முட்செடிகளை வெட்டி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
இதை அந்த பகுதி மக்கள் ராமதாசிடம் கேட்டபோது எனது உறவினருக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைத்துள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதால் இந்த சாலை எனக்கு சொந்தம் என கூறியதோடு முட்செடிகளையும் அகற்ற மறுத்ததாக தெரிகிறது. 

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கள்ளக்குறிச்சி-வேப்பூர் சாலையில் கூத்தக்குடி புதுக்காலனி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாஸ் உள்ளிட்ட போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலையின் குறுக்கே போடப்பட்ட முட்செடிகளும் அகற்றப்பட்டன. இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.  சாலையின் குறுக்கே போடப்பட்ட முட்செடிகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்த சம்பவம் கூத்தக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை திருவப்பூரில் குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசமடைந்தனர்.
2. தேன்கனிக்கோட்டையில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
தேன்கனிக்கோட்டையில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. தடுப்பூசிக்கு டோக்கன் வழங்காததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்; கோபி அருகே பரபரப்பு
கோபி அருகே தடுப்பூசிக்கு டோக்கன் வழங்காததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
ரெகுநாதபுரத்தில் நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. நாமக்கல்லில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
நாமக்கல்லில் சாலையின் நடுவே உள்ள தடுப்புசுவருக்கு இடையே இடைவெளி விட வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால், சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.