சூளகிரியில், மனநோயாளி கல் எறிந்ததால் டவுன் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதம்


சூளகிரியில், மனநோயாளி கல் எறிந்ததால் டவுன் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதம்
x
தினத்தந்தி 3 July 2021 10:37 PM IST (Updated: 3 July 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரியில், மனநோயாளி கல் எறிந்ததால் டவுன் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது.

சூளகிரி:
ஓசூரில் இருந்து சூளகிரி வழியாக 37 என்ற எண்ணுடைய டவுன் பஸ், கொடி திம்மனப்பள்ளி கிராமத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், நேற்று அந்த பஸ் சூளகிரி பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு நபர், டவுன் பஸ் மீது கல் வீசினார். இதில் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதில் அதிர்ச்சியடைந்த கண்டக்டர் மற்றும் டிரைவர், பஸ்சை சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அந்த நபர் மீது புகார் அளித்தனர். விசாரணையில், அந்த நபர் மனநோயாளி என்றும், சூளகிரி வீதிகளில் சுற்றித்திரியும் அவர், கடைகள் மீதும், வீடுகள் மீதும் கற்கள் வீசுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் அந்த மனநோயாளி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story