கள்ளக்குறிச்சியில் போர்வெல் எந்திர லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்
டீசல் விலை உயர்வை கண்டித்து கள்ளக்குறிச்சியில் போர்வெல் எந்திர லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்
கள்ளக்குறிச்சி
டீசல் விலை உயர்வை கண்டித்தும், டீசலுக்கு ஜி.எஸ்.டி.வரி விதிக்க வேண்டும், விவசாய பயன்பாட்டுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க டீசலுக்கு மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போர்வெல் எந்திர லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் 5 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து நேற்று 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் போர்வெல் எந்திர உரிமையாளர்கள் 100 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து போர்வெல் எந்திர லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது. கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கைகாட்டி அருகில் சுமார் 60 போர்வெல் எந்திர லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் பகுதியிலும் போர்வெல் எந்திர லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரு லாரியில் 10 தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இதனால் 100 லாரிகளில் பணிபுரிந்து வரும் ஆயிரம் தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும், போராட்டம் வருகிற 6-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளதாக போர்வெல் எந்திர லாரி உரிமையாளர் சங்க மாவட்ட பொருளாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story