கோவையில் 474 பேருக்கு கொரோனா


கோவையில் 474 பேருக்கு கொரோனா
x

கோவையில் 474 பேருக்கு கொரோனா

கோவை

கோவையில் நேற்று 474 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 5 பேர் உயிரிழந்தனர். நீலகிரியில் 77 பேருக்கு தொற்று உறுதியானது.

474 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்தது. மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று கடந்த மாதம் முதல் குறைய தொடங்கியது. 

கடந்த சில நாட்களாக கொரோனா பலி எண்ணிக்கை யும் குறைய தொடங்கி உள்ளது.


மாநில சுகாதார துறை வெளியிட்ட கொரோனா பாதிக்கப்பட்டோர் பட்டியலில் நேற்று கோவை மாவட்டத்தில் மேலும் 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 969 ஆக அதிகரித்து உள்ளது.

5 பேர் பலி

கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனா பலி 2,063 ஆக உயர்ந்து உள்ளது. 

அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 857 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். 

இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 2 லட்சத்து 15 ஆயிரத்து 910 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 2,996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நீலகிரியில் 77 பேருக்கு கொரோனா

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 77 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 604 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 34 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

இதன் மூலம் இதுவரை 27 ஆயிரத்து 645 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 795 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் உள்ள 340 ஆக்சிஜன் படுக்கைகளில், 115 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 225 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.


Next Story