மது, லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது
மது, லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது
கீரமங்கலம், ஜூலை.4-
கீரமங்கலம் கடைவீதி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பு, அதன் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற நெய்வத்தளி கிராமத்தைச் சேர்ந்த காந்தி (வயது 55) என்பவரை கீரமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 18 மதுப்பாட்டில்கள், ரூ.4600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல் மேற்பனைக்காடு கிழக்கு பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற தஞ்சாவூர் மாவட்டம் படப்பணார்வயல் கிராமத்தைச் சேர்ந்த சிவநேசன் (65) என்பவரை கீரமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 60 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.2,540 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story