மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விரிவுபடுத்தப்பட்ட வழக்கு தாக்கல் செய்யும் மையம்-ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி திறந்து வைத்தார் + "||" + Extended case filing center at Krishnagiri Consolidated Court

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விரிவுபடுத்தப்பட்ட வழக்கு தாக்கல் செய்யும் மையம்-ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி திறந்து வைத்தார்

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விரிவுபடுத்தப்பட்ட வழக்கு தாக்கல் செய்யும் மையம்-ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரிவுபடுத்தப்பட்ட வழக்கு தாக்கல் செய்யும் மையம், இ-சேவை மையத்தை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரிவுபடுத்தப்பட்ட வழக்கு தாக்கல் செய்யும் மையம், இ-சேவை மையத்தை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி திறந்து வைத்தார்.
ஐகோர்ட்டு தலைமை நீதிபதி 
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மையப்படுத்தப்பட்ட வழக்கு தாக்கல் செய்யும் மையம் உள்ளது. இது தற்போது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 
இந்த கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமை தாங்கி, கட்டிடத்தை திறந்து வைத்தார்.
மேலும் வழக்கு விவரங்களை வக்கீல்களும், வழக்கு நடத்துபவர்களும் அறிந்து கொள்ள உதவும் இ-சேவை மையத்தையும் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி ரா.கலைமதி முன்னிலை வகித்தார். இந்த இ-சேவை மையம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மரக்கன்று நட்டார் 
தொடர்ந்து கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மரக்கன்றுகளை நட்டார். மேலும் நீதிபதிகள் மற்றும் வக்கீல்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து நீதிமன்ற கட்டிடங்களை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சிகளில் கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமாரி, குடும்ப நல நீதிபதி ம.செல்வம், மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.லதா, மோட்டார் வாகன விபத்துக்கள் கோருரிமை தீர்ப்பாய சிறப்பு மாவட்ட நீதிபதி டி.வி.மணி, தலைமை குற்றவியல் நீதிபதி ச.ராஜசிம்மவர்மன், முதன்மை சார்பு நீதிபதி ப.கணேசன், கூடுதல் சிறப்பு நீதிபதி சி.குமாரவர்மன், மோட்டார் வாகன விபத்துக்கள் கோருரிமை தீர்ப்பாய சிறப்பு சார்பு நீதிபதி ச.ராஜமகேஷ், கிருஷ்ணகிரி ஜே.எம். 2 நீதிமன்ற நீதிபதி ப.பீட்டர், மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். 
தொடர்ந்து ஓசூர் சென்ற ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி நீதிபதிகள், வக்கீல்களுடன் கலந்துரையாடினார்.