மாவட்ட செய்திகள்

குளத்தில் 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு + "||" + Sami idols

குளத்தில் 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு

குளத்தில் 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு
குளத்தில் 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு
அறந்தாங்கி, ஜூலை.4-
அறந்தாங்கி அருகே அழியாநிலை ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள குளத்தில் 2 சாமி சிலைகள் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினர். விசாரணையில் அழியாநிலையை சேர்ந்த ஒருவர் சித்தாலங்குடியிருப்பில் உள்ள அரசமரத்தடி பிள்ளையார் கோவிலில் இருந்த ஒரு அம்பாள் சிலை மற்றும் நாகர் சிலைகளை கடந்த வருடம் அகற்றி அந்த பகுதியில் உள்ள வத்திரான் குளத்தில் போட்டுள்ளார். தற்போது குளத்தில் தண்ணீர் வற்றிவிட்டதால் சிலைகள் தென்பட்டுள்ளது. இதில் அம்பாள் சிலை சிமெண்டால் செய்யப்பட்டுள்ளதால் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்த நிலையில் உள்ளது. நாகர் சிலை கல்லால் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகளை தாசில்தார் மார்டின் லூதர் கிங் கைப்பற்றி உள்ளார்.