மதுபாட்டில்கள் கடத்தல் 4 பேர் கைது
கள்ளக்குறிச்சி, சின்னசேலத்தில் மதுபாட்டில்கள் கடத்தல் 4 பேர் கைது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையிலான போலீசார் கச்சிராயப்பாளையம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை வழி மறித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையை திறந்து பார்த்தபோது அதில் 140 மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் வெள்ளாளகுண்டம் கிராமத்தை சேர்ந்த ஏகாம்பரம் மகன் ஜெயப்பிரகாஷ்(வயது 25), சக்திவேல் மகன் மணிகண்டன்(27) என்பதும் சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக்கடைகள் திறக்காததால் இங்கிருந்து மதுபாட்டில்களை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்ததோடு மதுபாட்டில்களுடன் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சின்னசேலம் அண்ணாநகர் ரெயில்வேகேட் அருகில் சாக்குமூட்டையுடன் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரிடம் போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது 2 சாக்கு மூட்டைகளில் 64 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர், அவ்வையார் தெருவை சேர்ந்த சின்னராஜ்(44), கடைவீதியைச் சேர்ந்த கோபிநாத்(30) என்பதும், மதுபாட்டில்களை ஆத்தூருக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைதுசெய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story