மாவட்ட செய்திகள்

நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் + "||" + nathakkadaiyuur koranaauusi

நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்

நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்
நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்
முத்தூர்:
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் சிவசக்திபுரம் அரசு ஆரம்பப்பள்ளியில் நேற்றுகாலை நடைபெற்றது. 
முகாமில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள். சவுமியா, குணபிரசாத், லட்சுமி பிரியா, சுகாதார ஆய்வாளர் தேவராஜன், கிராம சுகாதார செவிலியர்கள் மகாலட்சுமி, நளினி, குமுதவள்ளி, ரூபி மெர்சி, அமுதா தலைமையிலான சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், துணை சுகாதார செவிலியர் குழுவினர் கலந்து கொண்டு சிவசக்திபுரம் சுற்று வட்டாரபகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரிய -ஆசிரியைகள், அரசு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ- மாணவிகள், இளைஞர்கள், முதியோர், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஆகியோருக்கு முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டனர். இதன்படி நேற்று இங்கு ஒரே நாளில் மொத்தம் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.