மது விற்ற 29 பேர் கைது


மது விற்ற 29 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2021 11:02 PM IST (Updated: 3 July 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

மது விற்ற 29 பேர் கைது

திருப்பூர், 
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவுப்படி, மாவட்டத்தில் தேவையின்றி சுற்றித் திரிபவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து, கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாமல் தேவை இல்லாமல் சுற்றித்திரிந்த 17 பேருக்கு ரூ.3,400 அபராதம் வசூலிக்கப்பட்டது. 10 பேரின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மாவட்டத்தில் மது பாட்டில்கள் விற்பனை ஈடுபட்டவர்கள் 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 510 மதுபாட்டில்கள், 17 லிட்டர் கள், 2 லிட்டர் சாராயம், 2 இருசக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story