வால்பாறை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசி
வால்பாறை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வால்பாறை
வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி எஸ்டேட் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதற்கு நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், துப்புரவு அதிகாரி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ பணியாளர்கள் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளருக்கு தடுப்பூசி போட்டனர். இதில், மொத்தம் 50 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story