நெகமம் அருகே கொரோனா தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்


நெகமம் அருகே கொரோனா தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 3 July 2021 11:21 PM IST (Updated: 3 July 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

நெகமம் அருகே கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.

நெகமம்

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நெகமம் அருகே உள்ள சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், அங்கு அதிகாலை முதலே தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.  இதில், 500 பேருக்கு மட்டுமே தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்த முடியாதவர்கள ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

 இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சமீப நாட்களாக கிராமங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் குறைந்த அளவிலான தடுப்பூசிகள் வருகின்றன. இதனால் பலர் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே கூடுதல் தடுப்பூசி வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Next Story