மாவட்ட செய்திகள்

பாம்பன் கடற்கரையில் ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா + "||" + carbian

பாம்பன் கடற்கரையில் ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா

பாம்பன் கடற்கரையில் ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா
பாம்பன் கடற்கரையில் கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம்
பாம்பன் கடற்கரையில் கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல்
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் சின்ன பாலம் கடற் கரையில் சாக்கு மூடை ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் பாம்பன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து போலீசார் சின்னப்பாலம் கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்றனர்.  கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்த சாக்கு மூடையை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா மூடையை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்து எடை போட்டு பார்த்ததில் சுமார் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 
விசாரணை
சின்னப்பாலம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கஞ்சா மூடை கடத்தல்காரர்கள் படகு மூலம் ஏற்றி இலங்கைக்கு கடத்திச் செல்லும்போது கடலோர காவல்படை ரோந்து கப்பலை பார்த்து பயந்து கடலில் வீசி தப்பி சென்று இருக்கலாம் அல்லது கடல் கொந்தளிப்பால் படகில் இருந்து தவறி கடலில் விழுந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப் படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.