ஒரே இடத்தில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு


ஒரே இடத்தில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 3 July 2021 6:16 PM GMT (Updated: 3 July 2021 6:16 PM GMT)

கொந்தகையில் நடந்த அகழாய்வில் ஒரே இடத்தில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

திருப்புவனம்,

கொந்தகையில் நடந்த அகழாய்வில் ஒரே இடத்தில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

அகழாய்வு

தமிழர்கள் நாகரிகத்தின் முன்னோடி என்பதை எடுத்துரைக்கும் விதமாக கீழடி அகழாய்வுகள் உலகிற்கு தெளிவுப்படுத்துகிறது. கீழடியில் கிடைத்த அகழாய்வு பொருட்கள் மூலம் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெள்ள, தெளிவாக தெரிகிறது. அங்கு இதுவரை 6 கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்றன.
தற்போது கடந்த பிப்ரவரி மாதம் முதல் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக ஒரு மாத காலம் அகழாய்வு பணி நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கு தளர்ைவ தொடர்ந்து அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கின.
இந்த அகழாய்வு கீழடியில் மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அடுத்தடுத்து தொடங்கப்பட்டன. கொந்தகையில் 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த வாரம் மனித எலும்புக்கூடு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முழு உருவ மனித எலும்புக்கூடு கிடைத்தது.

மேலும் 5 மனித எலும்புக்கூடுகள்

இந்த நிைலயில் அகழாய்வு பணிகள் நேற்றும் அதே இடத்தில் தொடர்ந்து நடைபெற்றன. இதில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு தான் ஆணுடையதா, பெண்ணுடையதா என தெரிய வரும். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் எந்த நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவர்களுடையது என்பதும் தெரிய வரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

Next Story