வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தோகைமலை
தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய ஆணையர் குமரவேல் தலைமை தாங்கி பேசுகையில், 20 ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை நிதி ஆதாரம் பெறுவதற்கு ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் அறிக்கை அனுப்பப்பட வேண்டும். இதனால் அந்ததந்த ஊராட்சி அடிப்படை வசதிகளை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை இணையவழி வாயிலாக பதிவு செய்து ஊராட்சி செயலாளர்கள் அனுப்ப வேண்டும். என்றார். தொடர்ந்து பல்வேறு வகையான வளர்ச்சி பணிகளையும், வரும் காலங்களில் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், ஒன்றிய மேலாளர் பானுமதி, மண்டல துணை வளர்ச்சி அலுவலர் உஷா, சுரேஷ் உள்பட 20 ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story