வியாபாரி மீது தாக்குதல்-அண்ணன்-தம்பி கைது


வியாபாரி மீது தாக்குதல்-அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 3 July 2021 11:59 PM IST (Updated: 3 July 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் வியாபாரி மீது தாக்குதல் நடத்திய அண்ணன்-தம்பி ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடி,

காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை வீதியில் வசிப்பவர். பெருமாள் (வயது 54). விறகு வியாபாரி. இவரது வீட்டின் அருகே பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனத்தை அண்ணன்-தம்பியான ராஜபாண்டி மற்றும் ராஜகுமார் நடத்தி வந்து உள்ளனர்.
இவர்கள் தங்களது காரை பெருமாள் வீட்டு வாசல் முன்பு நிறுத்தியுள்ளனர். இதில் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் ராஜ்குமாரும், ராஜபாண்டியும் கல்லை எடுத்து பெருமாளின் வாயில் ஓங்கி அடித்தனர். இதனால் ரத்த காயமடைந்த அவரது மூன்று பற்கள் கீழே விழுந்தன. இதுகுறித்து பெருமாள் காரைக்குடி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தெற்கு போலீசார் ராஜபாண்டி ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


Next Story