மழையால் வீட்டை இழந்தவருக்கு நிவாரணம்
மழையால் வீட்டை இழந்தவருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
நொய்யல்
கரூர் மாவட்டம் ஓனவாக்கல்மேட்டை சேர்ந்தவர் துரைசாமி (வயது 55). கூலித் தொழிலாளியான இவர், அப்பகுதியில் சிமெண்டு அட்டைவேயப்பட்ட வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு இரவில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையில் துரைசாமி வீட்டின் மேற்கூரையில் வேயப்பட்ட சிமெண்டு அட்டைகள் தூக்கி வீசப்பட்டு காற்றில் பறந்து சென்று நொறுங்கியது. இதனால் வீட்டில் இருந்த அனைத்து டிவி உள்பட அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தது. இதுகுறித்து அறிந்த கரூர் அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், காகிதபுரம் பேரூர் செயலாளர் வக்கீல் சதாசிவம் ஆகியோர் துரைசாமியின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிபாதிக்கப்பட்ட அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். மேலும், புகளூர் தாசில்தார் செந்தில், வருவாய் ஆய்வாளர் கற்பகவல்லி மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று துரைசாமி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்து குறித்து மதிப்பீட்டு கணக்கெடுத்தனர். விரைவில் வருவாய்த்துறை சார்பில் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story