நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 180 அரசு பஸ்கள் இயக்கம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 180 அரசு பஸ்கள் இயக்கம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 3 July 2021 6:43 PM GMT (Updated: 3 July 2021 6:43 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 180 அரசு பஸ்கள் இயக்கம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் நாளை முதல் 180 அரசு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்துக்கு அனுமதி
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. நாளையுடன் (திங்கட்கிழமை) இந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், தமிழக அரசு வருகிற 12-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே வகை 1-ல் உள்ள நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தொற்று குறைந்து இருப்பதால் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி ஓட்டல்கள், டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இ-பாஸ், இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனவே பஸ்களை சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
180 பஸ்கள் இயக்கம்
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் நாமக்கல்லில் 2 பணிமனைகள், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள தலா ஒரு பணிமனை என மொத்தம் 4 பணிமனைகள் உள்ளன. இவற்றின் மூலம் 264 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
தற்போது அரசு 66 சதவீத பஸ்களை நாளை முதல் இயக்க அனுமதி அளித்து உள்ளது. எனவே நாளை முதல் 180 அரசு பஸ்களை இயக்க உள்ளோம். இதற்காக பஸ்களை சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 50 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்படும். இதற்காக ஒவ்வொரு சீட்டின் பின்பகுதியிலும் ரைட் குறியீடு வரையப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story