நாமக்கல் மாவட்டம் முழுவதும் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டுகள் 26 பேர் அதிரடி இடமாற்றம்


நாமக்கல் மாவட்டம் முழுவதும் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டுகள் 26 பேர் அதிரடி இடமாற்றம்
x
தினத்தந்தி 3 July 2021 6:43 PM GMT (Updated: 3 July 2021 6:43 PM GMT)

நாமக்கல் மாவட்டம் முழுவதும் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டுகள் 26 பேர் அதிரடி இடமாற்றம்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 26 தனிப்பிரிவு போலீஸ் ஏட்டுகளையும் அதிரடியாக இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.
தனிப்பிரிவு போலீஸ் ஏட்டுகள்
நாமக்கல் மாவட்டத்தில் 26 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இவை அனைத்திலும் தனிப்பிரிவுக்கு என தனியாக ஒரு போலீஸ் ஏட்டு பணி அமர்த்தப்படுவது வழக்கம். இவர்கள் தினசரி நடைபெறும் நிகழ்வுகள், நடைபெற உள்ள ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், தடை செய்யப்பட்ட லாரி விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல்களை சேகரித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கொடுக்க வேண்டும்.
இவர்களுக்கு வாரம் ஒருமுறை ஆய்வு கூட்டத்தை நடத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்குவார். அந்த வகையில் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டுகளுக்கான கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கடந்த கால சம்பவங்கள், சாதி ரீதியான மோதல்கள், கிரிமினல் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொருவராக போலீஸ் சூப்பிரண்டு கேட்டறிந்தார்.
இடமாற்றம்
கூட்டம் முடிந்ததும் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 26 தனிப்பிரிவு போலீஸ் ஏட்டுகளையும் அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இவர்களில் ஒருவர் மட்டும் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மீதமுள்ள நபர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் புகாருக்கு உள்ளான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 23 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story