சாலையோரத்தில் இறந்து கிடந்த காட்டெருமை


சாலையோரத்தில் இறந்து கிடந்த காட்டெருமை
x
தினத்தந்தி 4 July 2021 12:13 AM IST (Updated: 4 July 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

சாலையோரத்தில் இறந்து கிடந்த காட்டெருமை

குன்னூர்

குன்னூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வருகின்றன. இந்த நிலையில் நேற்று குன்னூர் அருகே சோலாடாமட்டம் பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. 

இதை கண்ட வாகன ஓட்டிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் அந்த காட்டெருமை பிற விலங்குடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததா? அல்லது விஷ செடிகளை தின்றதால் உயிரிழந்ததா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story