வெளியூர்களுக்கு சென்று திரும்பிய 2,500 டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
நீலகிரி மாவட்டத்தில் வெளியூர்களுக்கு சென்று திரும்பிய 2,500 டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் வெளியூர்களுக்கு சென்று திரும்பிய 2,500 டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
தடுப்பூசி செலுத்த திட்டம்
நீலகிரி மாவட்டம் குறைந்த மக்கள் தொகையை கொண்டுள்ளதால், 18 வயதுக்கு மேல் தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நீலகிரிக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகள் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு கொண்டு சென்று கிராமப்புற மக்களுக்கு போடப்படுகிறது. அங்கு கொரோனா பரவுவதை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முன்னுரிமை அடிப்படையில்...
தொடர்ந்து பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு விளைபொருட்கள், அத்தியாவசிய பொருட்களை லாரிகளில் கொண்டு சென்று வரும் டிரைவர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று 3-வது கட்டமாக டிரைவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. முகாமில் டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆதார் எண், பெயர் போன்ற விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் டிரைவர்கள் 324 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று கோத்தகிரி, குன்னூரில் தலா 300 டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
2,500 டிரைவர்கள்
ஆட்டோ டிரைவர்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. வெளியிடங்களுக்கு பலர் சென்று வருவதாலும், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்களுடன் தொடர்பில் இருப்பதாலும் டிரைவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஊரடங்கு தளர்வால் பிற மாவட்டங்களில் இருந்து அதிகம் பேர் வர வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரியில் இதுவரை டிரைவர்கள் 2,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் ஓட்டல்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story