புரமணவயல் ஆதிவாசி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது


புரமணவயல் ஆதிவாசி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது
x
தினத்தந்தி 4 July 2021 12:13 AM IST (Updated: 4 July 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

புரமணவயல் ஆதிவாசி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது

கூடலூர்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. சமீபத்தில் புரமணவயல் ஆதிவாசி கிராமத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறுவர்கள் உள்பட 9 பேருக்கு தொற்று உறுதியானது.

இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் தலைமையிலான சுகாதார பணியாளர்கள் அந்த கிராமத்துக்கு சென்று அவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த அந்த கிராமத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தனர். தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story