மின்மயமாக்கல் பணி தீவிரம்


மின்மயமாக்கல் பணி தீவிரம்
x
தினத்தந்தி 4 July 2021 12:29 AM IST (Updated: 4 July 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் - மானாமதுரை ெரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அருப்புக்கோட்டை, 
விருதுநகர் - மானாமதுரை ெரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
மின்மயமாக்கல் பணி
நாடு முழுவதும் விரைவான பயணம், சுற்றுச்சூழல் மாசுபாடு தவிர்த்தல், செலவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரெயில்வே வழித்தடங்கள் அனைத்தும் மின்மயமாக்கப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் ரெயில்பாதையில் மின்மயமாக்கல் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
இந்த பணிகள் அருப்புக்கோட்டை ெரயில் நிலையத்தில்  70 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. 
டிசம்பரில் முடியும் 
இந்த பகுதியில் மின் கம்பங்கள் நடும் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளன. 
மேலும் மின் கம்பிகள் பொருத்துவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. 
இந்த பணிகள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story