கொடைரோடு அருகே மாவூர் அணையில் தண்ணீர் திறப்பு
தினத்தந்தி 4 July 2021 1:02 AM IST (Updated: 4 July 2021 1:02 AM IST)
Text Sizeகொடைரோடு அருகே மாவூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
கொடைரோடு:
கொடைரோடு அருகே பள்ளப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் மாவூர் அணை உள்ளது. 25 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக அணை நிரம்பியது.
இதனையடுத்து அணையில் இருந்து நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேறுகிற தண்ணீர் புலம்மாசி குளம், அகரம் குளம், ரெட்டிக்குளம் ஆகிய குளங்களுக்கு செல்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire