மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 பேரின் உயிரை பறித்த கொரோனா + "||" + 6 person death for corona affection in DINDIGUL

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 பேரின் உயிரை பறித்த கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 பேரின் உயிரை பறித்த கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் 6 பேரின் உயிரை கொரோனா பறித்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பும், இறப்பும் குறைந்து வருகிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்புடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல்லை சேர்ந்த 75, 64 வயது முதியவர்கள், வேடசந்தூர் பூத்தம்பட்டியை சேர்ந்த 46 வயது ஆண், திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்த 73 வயது மூதாட்டி, வேடசந்தூர் பாரதிபுரத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி, வடமதுரையை சேர்ந்த 64 வயது முதியவர் ஆகியோர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதன்மூலம் கொரோனா இறப்பு எண்ணிக்கை 595 ஆக உயர்ந்தது. 
இதற்கிடையே 4 பெண்கள் உள்பட மேலும் 31 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 677 ஆக உயர்ந்தது. அதேநேரம் 12 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 367 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேனி மாவட்டத்தில் 6 பேரின் உயிரை பறித்த கொரோனா
தேனி மாவட்டத்தில் 6 பேரின் உயிரை கொரோனா பறித்தது. புதிதாக 491 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.