மாவட்ட செய்திகள்

நெல்லையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் + "||" + Seizure of 750 bundles of ration rice stored in the godown

நெல்லையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

நெல்லையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
நெல்லையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் தனிப்படையினர் நேற்று இரவு வண்ணார்பேட்டை புறவழிச் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டி தனியார் குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர் அப்போது அங்கிருந்த 6 பேர், போலீசாரை கண்டதும் தப்பிச் சென்றனர். இதையடுத்து போலீசார் அந்த குடோனில் சென்று பார்த்தபோது 750 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாநகர போலீசார், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் தில்லைநாயகம் தலைமையில் போலீசார் வந்து ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குடோன் உரிமையாளர் மற்றும் அங்கு பதுங்கியிருந்தவாகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவுக்கு கடத்த முயன்ற 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சிவகாசியில் இருந்து விருதுநகருக்கு கடத்தப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
3. ஆழியாறு அகதிகள் முகாமில் 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஆழியாறு அகதிகள் முகாமில் 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
4. கேரளாவுக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திப்பம்பட்டியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பதுக்கி வைத்த குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதுடன், வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.