குளச்சலில் கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
கடல் சீற்றத்தால் குமரியில் கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
குளச்சல்,
கடல் சீற்றத்தால் குமரியில் கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மீன்பிடி தடைகாலம்
குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறது. மீன்கள் இனப்பெருக்கம் பருவ காலத்தையொட்டி விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த மே மாதம் 31-ந் தேதி நள்ளிரவு முதல் ஜூலை 31-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. வள்ளங்கள், கட்டுமரங்கள் மட்டும் மீன் பிடிக்க சென்று வருகின்றன.
சூறைக்காற்று
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் வள்ளம், கட்டுமர மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால் கடல் சீற்றத்துடன் பலத்த சூறைக்காற்று வீசியதால், அவர்கள் கட்டுமரங்களை தொடர்ந்து செலுத்த முடியாமல் அவசர, அவசரமாக பாதியிலேயே கரை திரும்பினர். கரை திரும்பிய கட்டுமரங்கள் மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நேற்று மீன் வாங்க வந்த வியாபாரிகள், பொதுமக்கள் மீன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story