இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 July 2021 1:26 AM IST (Updated: 4 July 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

பனமரத்துப்பட்டி,
மல்லூர் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது, சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து, தேங்காய், பழம், பொரி படைத்து, இறுதி மரியாதை செய்து கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். இதில், விவசாய சங்க மாவட்ட செயலாலர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சங்கீதா, ஒன்றிய செயலாளர் பாலன், ஒன்றிய துணைச்செயலாளர் தினேஷ், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி கிளை செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story