மாவட்ட செய்திகள்

மேச்சேரி அருகேமோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதியதில் அண்ணன்- தம்பி பலி + "||" + Brother-in-law killed

மேச்சேரி அருகேமோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதியதில் அண்ணன்- தம்பி பலி

மேச்சேரி அருகேமோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதியதில் அண்ணன்- தம்பி பலி
மேச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் அண்ணன், தம்பி பலியானார்கள்.
மேச்சேரி
அண்ணன்-தம்பி
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் காவேரிபுரம் சத்யாநகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 31). இவர் சொந்தமாக பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். இவருடைய தம்பி செல்வம் (29). விவசாயி.
நேற்று அதிகாலை  அண்ணன், தம்பி 2 பேரும் பெங்களூருவுக்கு பொக்லைன் எந்திரத்துக்கு தேவையான பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை வெங்கடேஷ் ஓட்டி சென்றார். மேட்டூர்-மேச்சேரி சாலையில் எம்.காளிப்பட்டியை அடுத்த முனியப்பன் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.
பரிதாப சாவு
அப்போது, மேச்சேரியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக் கொண்டு சென்ற மினி வேன் ஒன்று திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் வெங்கடேஷ், செல்வம் ஆகியோர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். 
இதுகுறித்த தகவலின்பேரில் மேச்சேரி போலீசார் விரைந்து சென்று, விபத்தில் இறந்த வெங்கடேஷ், செல்வம் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
மேலும் விபத்தை ஏற்படுத்தியதாக தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள மூலக்காடு சோளியானூர் பகுதியை சேர்ந்த மினி வேன் டிரைவர் வெற்றிவேலை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் அண்ணன், தம்பி பலியான சம்பவம் கொளத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.