செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்


செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 4 July 2021 1:41 AM IST (Updated: 4 July 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

சுரண்டை:
சுரண்டை சிவகுருநாதபுரம் பாறையடி தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). தொழிலாளி. இவரது மனைவி தெய்வக்கனி. இந்த நிலையில் நேற்று மாலையில் பாண்டியன் மதுபோதையில் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து மதுகுடிக்கக்கூடாது என்று அவரது மனைவி தெய்வக்கனி கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியன் சிவகுருநாதபுரம் இரட்டைகுளம் சாலையில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயராஜ், வேல்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஒலிபெருக்கி மூலம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் ½ மணி நேரம் கழித்து பாண்டியன் தானாக கீழே இறங்கி வந்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story