அய்யனார் கோவில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
அய்யனார் கோவில் சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள எழுமூர் கிராமத்தில் 100 வருடம் பழமை வாய்ந்த அய்யனார் கோவில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது. இந்த கோவிலின் உள்பகுதியில் மதுரைவீரன், செல்லியம்மன், விநாயகர் என பழமை வாய்ந்த சிலைகள் இருந்தன. நேற்று மாலை கிராம மக்கள், கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது அங்குள்ள சிலைகள் சேதம் அடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அறநிலையத்துறையினர், அங்கு வந்து பார்வையிட்டு சிலைகள் சேதம் அடைந்தது குறித்து விசாரணை நடத்தினர். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த கோவிலில் சிலைகள் சேதமடைந்து கிடந்ததால், அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story