மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று


மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 4 July 2021 1:48 AM IST (Updated: 4 July 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 39 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 268 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 634 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று கோவாக்சின் தடுப்பூசி இல்லாததால், கோவிஷீல்டு தடுப்பூசி 3,862 பேருக்கு போடப்பட்டுள்ளது. தற்போது 4,120 கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பில் உள்ள நிலையில், மேலும் 2,500 கோவிஷீல்டு தடுப்பூசி வரவுள்ளது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story